Enable Javscript for better performance
நெடுங்காடு - Dinamani

சுடச்சுட

    

    தொகுதி பெயர் : நெடுங்காடு - (தனி)

    வரிசை எண் : 24

    சிறப்புகள் :  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரே தனி  தொகுதி இது. விவசாயம் மற்றும் கிராமங்கள் நிறைந்த பகுதி, பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தனியார் மருத்துவக் கல்லூரி, தனியார் மற்றும் அரசு சார்பில் பொறியியல் கல்லூரிகள் இப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டி. கட்டுமானம் பூவம் பகுதியில் நடைபெற்றுவருகிறது.. புதுச்சேரி அரசின் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவையும் இங்குள்ளது.  நெடுங்காடு தொகுதி கல்வி நிறுவனங்கள் கொண்டதாக விளங்குகிறது.

    அடங்கியிருக்கும் பகுதிகள் : குரும்பகரம், நெடுங்காடு, பொன்பேத்தி, புத்தக்குடி, மேலகாசாக்குடி, வரிச்சிக்குடி வடக்கு, வரிச்சிக்குடி தெற்கு, பூவம், திருவேட்டக்குடி, கோட்டுச்சேரி.

    இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில்  ஆதிதிராவிடர்கள் அதிகமாக உள்ளனர். மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் ஏறக்குறைய சரிசமமான நிலையிலேயே இருக்கின்றனர். 

    வாக்குச் சாவடிகள் :  33 :

    .இதுவரை எம்.எல்.ஏ.க்கள் :

    1964 - ப.சண்முகம் - காங்கிரஸ்..

    1969 - ப.சண்முகம் - காங்கிரஸ்.

    .1974 - குப்புசாமி - காங்கிரஸ்.

    1977 - செல்வராஜ் - அதிமுக.

    1980, 1985, 1990, 1991  - மு.சந்திரகாசு - காங்கிரஸ்.

    1996  அ.மாரிமுத்து - திமுக.

    2001 - மு.சந்திரகாசு - காங்கிரஸ்.

    2006  - அ.மாரிமுத்து - சுயேச்சை.

    2011 - மு.சந்திரகாசு - என்.ஆர்.காங்கிரஸ்.

    வாக்காளர்கள் எண்ணிக்கை : 

    ஆண் -  14,303

    பெண் - 16,095

    திருநங்கைகள் - இல்லை.

    மொத்தம் - 30,398

    தேர்தல் நடத்தும் அதிகாரி : பா.கீதா.

    தொடர்பு எண் : 9442015317

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai