Enable Javscript for better performance
பா.ம.க தேர்தல் அறிக்கை: உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும்- Dinamani

சுடச்சுட

    

    பா.ம.க தேர்தல் அறிக்கை: உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும்

    By dn  |   Published on : 15th April 2016 01:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

    வேளாண்மை

    வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். உழவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் இதில் சேர்க்கப்படும்.

    தோட்டக்கலைத்துறை, நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றுக்கு தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களையும் சேர்த்து வேளாண் துறைக்கு மொத்தம் 3 அமைச்சர்கள் இருப்பார்கள்.

    வேளாண்மைக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்டவையும், மின்சார மோட்டாரும் இலவசமாக வழங்கப்படும்.

    உழவர்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஓர் டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.

    கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,200 ஆகவும் உயர்த்தப்படும்.

    உழவர்களின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதன ஆலைகள், ஏற்றுமதி மண்டலங்கள் அமைக்கப்படும்.

    இவற்றில் வேளாண் பொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.  தமிழகத்தில் 4 மண்டல வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கும் இஸ்ரேலிய வேளாண்துறைக்கும் இடையே ஒத்துழைப்பு உடன்பாடு செய்யப்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாது.

    காவிரி பாசன மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். பிற மாவட்டங்களில் தேவையான அளவு அமைக்கப்படும்.

    தில்லி, பெங்களூரில் செயல்படுவது போன்று திருச்சியில் சஃபல் சந்தை (Safal Market) அமைக்கப்படும்.

    பனையிலிருந்து பதனீரும், தென்னையிலிருந்து நீராவும் (NEERA) இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும்.

    நன்செய் நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீர்ப்பாசனம்

    நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம்... தனி அமைச்சர் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.

    அவினாசி-அத்திக்கடவு, பாண்டியாறு - புன்னம்புழா, மேட்டூர் உபரி நீர் பாசனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 33 லட்சம் ஹெக்டேரிலிருந்து 60 லட்சம் ஹெக்டேராகவும், விவசாயம் செய்யப்படும் நிலங்களின் பரப்பு 48 லட்சம் ஹெக்டேரில் இருந்து ஒரு கோடி ஹெக்டேராகவும் அதிகரிக்கப்படும்.

    ஆறுகள் மற்றும் கால்வாய்களில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டப்படும். தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீராணம் ஏரி, பொன்னேரி ஏரி, ஆர்.எஸ்.மங்கலம் ஏரி உள்ளிட்ட அனைத்துப் பெரிய ஏரிகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai