Enable Javscript for better performance
பா.ம.க தேர்தல் அறிக்கை: தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் - Dinamani

சுடச்சுட

    

    பா.ம.க தேர்தல் அறிக்கை: தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம்

    By dn  |   Published on : 15th April 2016 01:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

    மருத்துவம்

    தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது.

    இலவச மருத்துவம் வழங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு சுகாதார இயக்கம் (Tamil Nadu Health Mission) என்ற புதியத் திட்டம்  செயல்படுத்தப்படும். அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். 

    புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கான அதிகவிலை கொண்ட மருந்துகளை வாங்குவதற்கு உதவ தனி நிதியம். மருந்து விலையை கட்டுப்படுத்த Generic மருந்துகள் ஊக்குவிக்கப்படும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வசதிகளைக் கொண்ட அதிஉயர் சிறப்பு மருத்துவமனை (Super Speciality Hospital) அமைக்கப்படும். இம்மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளுடன் தகவல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படும்.

    கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால உதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள 79,394 கிராமங்களிலும் ஆஷாக்கள் (Accredited Social Health Activists-ASHAs) நியமிக்கப்படுவார்கள்.

    இவர்கள் கருவுற்றப் பெண்களுக்கு பேறு கால உதவிகளைச் செய்வார்கள்.

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், 24 மணிநேர முதலுதவி வழங்கும் மருத்துவமனைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

    உலகின் தலைசிறந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஸ்டேன்ஃபோர்டு உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களுடன் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் இணைக்கப்படும்.

    மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, அவர்களின் தாய்க்கு தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.

    பள்ளிக்கூட மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின்கீழ், அனைத்துக் கொள்கைகளுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இதற்காக மருத்துவ ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

    நோய்களைத் தடுக்கும் நோக்குடன் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai