Enable Javscript for better performance
பா.ம.க தேர்தல் அறிக்கை: திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்- Dinamani

சுடச்சுட

    

    பா.ம.க தேர்தல் அறிக்கை: திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்

    By dn  |   Published on : 15th April 2016 01:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

    நிர்வாகம்

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

    ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

    அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத் தலைநகரில் நடத்தப்படும். அதேபோல், மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையிலான குழு சென்று ஆய்வு நடத்தும்.

    அரசின் முடிவுகள் பெரும்பாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் எடுக்கப்படும். சட்டமுன்வரைவுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாற்றத்துடன் நிறைவேற்றப்படும்.

    அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில், தமிழகம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக தலைமைச் செயலாளர் நிலையிலான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அம் மண்டலத்தில் நிர்வாகம் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படும்.

    திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்.

    தமிழ்நாட்டில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

    மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க முதலமைச்சர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்  இலவச தொலைபேசி சேவை தொடங்கப்படும்.

    சட்ட மேலவை

    தமிழ்நாட்டில் சட்டமேலவை மீண்டும் ஏற்படுத்தப்படும்.

    ஆண்டுக்கு நான்குமுறை சட்டப்பேரவை கூடுவதும், 100 நாட்கள் பேரவைக் கூட்டம் நடப்பதும் உறுதி செய்யப்படும். பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    நிதிநிலை தயாரிப்புக்கு முன்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

    நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக நடவடிக்கை திட்ட விவர அறிக்கை (Action Taken Report), தாக்க அறிக்கை (Outcome Budget), பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) ஆகியவை தாக்கல் செய்யப்படும்.

    வேளாண் துறைக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Agriculture) அமைக்கப்படும்.

    காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சுதந்திரமான  காவல் ஆணையம் (Independent Police Authority) அமைக்கப்படும்.

    அனைத்து காவல் நிலையங்களிலும் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும்.

    உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai