Enable Javscript for better performance
பா.ம.க தேர்தல் அறிக்கை: மது ஆலைகளின் உரிமம் இரத்து செய்யப்பட்டு மூடப்படும் - Dinamani

சுடச்சுட

    

    பா.ம.க தேர்தல் அறிக்கை: மது ஆலைகளின் உரிமம் இரத்து செய்யப்பட்டு மூடப்படும்

    By dn  |   Published on : 15th April 2016 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

    மது ஒழிப்பு

    தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பா.ம.க. ஆட்சி அமைந்தபின் முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில் தான்.

    தமிழ்நாட்டில் உள்ள மது ஆலைகளின் உரிமம் இரத்து செய்யப்பட்டு மூடப்படும்.

    மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுதல், கள்ளச்சாரயத்தைத் தடுத்தல்,  குடிநோயர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    மதுவால் கணவனை இழந்தப் பெண்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.

    கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

    கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர் கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

    கள்ளச்சாராய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 6 மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு அளிக்கப்படும். தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணையில் வெளிவரமுடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும்.

    கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    ஊழல் ஒழிப்பு

    ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா சட்டம் (Lokayukta act) கொண்டுவரப்படும்.

    முதலமைச்சரும், அமைச்சர்களும் லோக் அயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

    பொதுச்சேவை பெரும் உரிமைச் சட்டம் (Right to Public Service act) கொண்டு வரப்படும்.

    தகவல் ஆணையம் 10 உறுப்பினர்கள் மற்றும் தலைவரைக் கொண்ட வெளிப்படையான அமைப்பாக மாற்றப்படும்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்படும். மின் ஆளுமை (e-governance) முறையில் இணைக்கப்படும்.

    மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும், துறைகள் அளவில் செயலாளர்களும் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அவர்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட அலுவலகங்களில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் மட்டுமின்றி, அதைத் தடுக்கத் தவறிய பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொறுத்தப்படும். ஊழல் குறித்து புகார் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி சேவை வழங்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai