Enable Javscript for better performance
பிரியாணி பொட்டலத்தின் விலை என்ன? தேர்தல் ஆணையம் நிர்ணயம் - Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் செலவிடும் ஒவ்வொரு பொருளுக்கான தொகையும் தேர்தல் ஆணையத்தின் விலைப் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
     வேட்பாளர்கள் தனித்தனியாக செலவுக்
     கணக்குகளை காட்டச் செய்த போதும், தேர்தல் ஆணையத்தின் சார்பில் தனியாக கணக்கீடு மேற்கொள்ளப்படும். இந்த நிழல் செலவுப் பதிவேடு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள விலைப்பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
     இந்த விலைப்பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அந்தந்த மாவட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
     சென்னையைப் பொருத்தவரை ஒரு பாக்கெட் பிரியாணி ரூ.85 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற மற்ற உணவுப் பொருள்களின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
     அதன் விவரம்: தண்ணீர் பாட்டில் ரூ.10; டீ- ரூ.7; குளிர்பானங்கள் ரூ.10; சாப்பாடு ரூ.95.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai