Enable Javscript for better performance
பேராவூரணி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி தொகுதி பேராவூரணி. தஞ்சை மக்களவை  தொகுதிக்குள்பட்ட இத்தொகுதியில் பெரும்பாலும் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுமே பிரதானம். கேரளத்துக்கு அடுத்தபடியாக தென்னை சாகுபடி அதிகம் நடைபெறும் இங்கு முத்தரையர், முக்குலத்தோர், தலித்துகள், கோனார் என பலதரப்பட்ட மக்களும் வசிக்கின்றனர்.

    பேராவூரணி தொகுதியில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் என இரண்டு ஒன்றியங்களும், பேராவூரணி, பெருமகளூர் என இரண்டு பேரூராட்சிகளும், பட்டுக்கோட்டை வட்டத்தில் சில கிராமங்களையும், ஒரத்தநாடு வட்டத்தில் சில கிராமங்களையும், ஆலங்குடி வட்டத்தில் காட்டாத்தி கிராமத்தையும் உள்ளடக்கிய தொகுதி. தொகுதியில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மனோரா அமைந்துள்ளது.

    கோரிக்கைகள்: தென்னை வணிக வளாகம் அமைக்க வேண்டும். தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். கடைமடை பகுதி ஆறுகளை தூர்வார வேண்டும். நீதிமன்றம் அமைக்க வேண்டும். தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இவையே தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாகவும், ஏக்கமாகவும் உள்ளது.

    சுமார் 30 ஆண்டுகளாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் இத்தொகுதியில் வெற்றி பெறாததால், பெரிதாக வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ந்த சி. அருண்பாண்டியன் வெற்றி பெற்று, பின்னர் அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக மாறியதால், தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், அருண்பாண்டியன் வெற்றிப் பெற்று தொகுதி பக்கமே வரவில்லை என்ற கோபமும் தொகுதி முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதனால், இந்தமுறை எந்தக் கட்சி வேட்பாளரானாலும் அவர் மண்ணின் மைந்தராக இருக்க வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மண்ணின் மைந்தருக்கே வாக்களிப்பது எனவும் பொதுமக்கள் உறுதியுடன் உள்ளனர்.

    மொத்த வாக்காளர் 2,04,407

    ஆண்கள் 1,01,317

    பெண்கள் 1,03,085

    திருநங்கைகள் 5

    கடந்த கால தேர்தல்களில் வென்றோர் விவரம்:

    1967- மு.கிருஷ்ணமூர்த்தி (திமுக)

    1971- குழ. செல்லையா (சுயேச்சை)

    1977- எம்.ஆர். கோவேந்தன் (அதிமுக)

    1980- எம்.ஆர். கோவேந்தன் (அதிமுக)

    1984- எம்.ஆர். கோவேந்தன் (அதிமுக)

    1989 - ஆர். சிங்காரம் (காங்கிரஸ்)

    1991 - ஆர். சிங்காரம் (காங்கிரஸ்)

    1996 - எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தமாகா)

    2001 - எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தமாகா)

    2006 - எம்.வி.ஆர். வீரகபிலன் (அதிமுக)

    2011 - சி. அருண்பாண்டியன் (தேமுதிக)

    அதிமுகவோடு நேரடிப் போட்டியை விரும்பும்

    பேராவூரணி திமுகவினர்!

    பேராவூரணி தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்தும் கடந்த 1991 பேரவைத் தேர்தலுக்கு பின்

    கூட்டணிக் கட்சியினருக்கே பேராவூரணி தொகுதியை திமுக தலைமை ஒதுக்கி வந்துள்ளது.

    பேராவூரணி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக தொகுதிச் செயலர் மா. கோவிந்தராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அதிமுகவின் வாக்குவங்கியுடன் இணையாக மோத திமுக வேட்பாளர் நேரடியாக நின்றால் தான் வெற்றி பெற முடியும். கூட்டணிக்கட்சியான காங்கிரஸþக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் வெற்றி பெற முடியாது எனக்கூறி வந்தனர்.

    திமுக, அதிமுக நேரடி போட்டியாக இருக்க வேண்டும் என்பதோடு தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவரை திமுக வேட்பாளராக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர். இந்நிலையில், திமுகவே களம் இறங்கிறது. பேராவூரணி பேரூராட்சித் தலைவரும், திமுக முன்னாள்

    எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தியின் மருமகனுமான அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிஜேபியின் வேட்பாளராக பல்லவயல் இளங்கோ இருக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai