Enable Javscript for better performance
மதுரையில் இன்று பிரசாரம் தொடங்குகிறார் ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் இன்று பிரசாரம் தொடங்குகிறார் ஸ்டாலின்

    By மதுரை  |   Published on : 15th April 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin

    சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறார்.

     திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இருந்து ஸ்டாலின் பிரசாரம் தொடங்குகிறார். மாவட்டத்துக்கு உட்பட்ட 10 தொகுதிகளிலும் தலா ஒரு இடம் என்ற வகையில் அவரது பிரசாரம் திட்டமிடப்பட்டுள்ளது.

     இதன்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட யா.ஒத்தக்கடையில், திமுக வேட்பாளர் பி.மூர்த்தியை ஆதரித்து வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து மேலூர் பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்கிறார். பின்னர், பீபிகுளம், முனிச்சாலை சந்திப்பு, ஆரப்பாளையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், செக்கானூரணி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் வேனில் பிரசாரம் செய்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai