Enable Javscript for better performance
முதல்வர் ஜெயலலிதா இன்று அருப்புக்கோட்டையில் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா இன்று அருப்புக்கோட்டையில் பிரசாரம்

    By dn  |   Published on : 15th April 2016 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்கிறார்.இதற்காக அருப்புக்கோட்டை– தூத்துக்குடி சாலையில் உள்ள காந்தி நகரில் 6 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் அருப்புக்கோட்டைக்கு செல்கிறார்.

    அங்கு விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகங்கை, பரமக்குடி (தனி), மானாமதுரை (தனி), முதுகுளத்தூர், ராமநாத புரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய 14 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான அ.தி. மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.

    சென்னை தீவுத்திடலில் கடந்த 9-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, தனது பிரச்சாரத்தை தொடக்கினார். பிறகு கடலூர் மாவட்டம் விருதாச்சலத்திலும், அதை தொடர்ந்து தர்மபுரியிலும் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, வாக்கு சேகரித்தார்.

    இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.  பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஐ.ஜி.முருகன் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai