Enable Javscript for better performance
யாருக்கு ஓட்டு?- Dinamani

சுடச்சுட

    

    * பிரவீணா, (தொண்டு நிறுவன ஊழியர்)
     அண்ணாநகர் கிழக்கு
     ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக, திமுக கட்சிகள் ஒருவருக்கொருவர் புகார் தெரிவித்து வருகின்றனர். இது நமது ஜனநாயகம், எதிர்காலத்தை கேலி, கிண்டல் செய்வது போல் உள்ளது. அதனால் இந்த முறை நோட்டாவுக்குத்தான் எனது ஓட்டு.
    * செல்வம்
     (பூ வியாபாரம்) கோவூர்
     அதிமுக கோஷ்டிபூசல் இல்லாத கட்சி. அதனால் அம்மா எடுத்த முடிவே எல்லோரும் கேட்பாங்க, ஆட்சியும் நன்றாக நடக்கிறது. அதனால் அதிமுகவுக்கே எனது ஓட்டு.
    * முரளி
     (கூலித்தொழிலாளி) ராமாபுரம்
     அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி என எதுவுமே சரியில்லை. அதனால் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை.
    * ஆதிகேசவன்
     (பெயிண்டர்) போரூர்
     எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கிறதோ, அந்தக் கட்சியின் வேட்பாளருக்கே எனது ஓட்டு.
    * வி.விஜய்
     (லேப் டெக்னீசியன்) அண்ணாநகர் கிழக்கு
     பொதுமக்கள் பயனடையும் வகையில் முதல்வர் காப்பீடு திட்டம் அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் அதிமுகவுக்கு தான் ஓட்டளிப்பேன்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai