சுடச்சுட

  
  bjp

  பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் நேர்காணல் சென்னையில் நேற்று(மார்ச்.7)  தொடங்கியது.

  தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே), நேற்று அனைத்துத் தொகுதிகளுக்கும் நேற்றுவேட்பாளர் நேர்காணலைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர் தலைமையில் நேற்று நேர்காணல் கூட்டம் தொடங்கியது. இதில், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐ.ஜே.கே. பிரமுகர்கள் 150 பேர் கலந்துகொண்டனர்.

  ஐஜேகே சார்பில் தமிழகத்தின் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட 3,672 பேர் விருப்ப மனுக்கள் அளித்து இருந்தனர். இதில் பெண்களுக்கு என்று 50 சதவீதம் பேர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பாரிவேந்தர் முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, தமிழகத்தில் கூட்டணி அமைக்கவே அதிதமாக போராடி வரும் நிலையில், அக்கூட்டணியில் இருந்து ஐஜேகேவும் விலகி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

  இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முடிவு செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அடங்கிய தேமுதிக நிர்வாகிகள், தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக செய்திகள் கசிந்தன.

  இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக - பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பான வீண் வதந்தி என தெரிவித்தார்.

  மேலும் தேமுதிக தலைவர்களிடமிருந்து எந்த அழைப்புகளும் இதுவரை வரவில்லை என்றும், இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai