Enable Javscript for better performance
அதிமுக சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள்: நிர்மலா பெரியசாமி- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள்: நிர்மலா பெரியசாமி

    By DN  |   Published on : 04th May 2016 08:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Nirmala Periyasamy

    சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு லட்சம் மதிப்பிலான இலவசப் பொருள்கள் வழங்கப்படும் என அதிமுகவைச் சேர்ந்த நிர்மலா பெரியசாமி பேசியுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் களத்தில் இருக்கும் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.

    ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுக இன்னும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

    இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரபல தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

    அவர், இடைப்பாடி தொகுதிக்குள்பட்ட ஜலகண்டாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஜெயலலிதா கொடுத்து விட்டார். இன்னும் என்ன தேவை இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மிஷின் போன்றவை தான்.

    அதிம.க. தேர்தல் அறிக்கையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் அறிவிக்கப்படலாம் என்றார்.

    நிர்மலா பெரியசாமியின் இந்த பேச்சு தமிழக மக்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலவசங்களை வழங்க மாட்டோம் என பெரும்பாலான அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai