Enable Javscript for better performance
ஆர்.கே.நகரில் மே 6-ல் ஜெயலலிதா பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    
    AIADMK Jaya1

    சென்னை: முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகரில் வரும் வெள்ளிக்கிழமை (மே 6) பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதற்கான பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்டது. அதன்விவரம்:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வியாழக்கிழமை (மே 5) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில், 14 தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

    இதைத் தொடர்ந்து, சென்னை ஆர்.கே.நகருக்கு உட்பட்ட தொகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று (மே 6) வேன் மூலமாக பிரசாரம் மேற்கொள்கிறார். சூரிய நாராயண செட்டி தெரு ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் வாக்கு சேகரிக்கும் அவர், வீரராகவன் சாலை வழியாக வ.உ.சி. சாலை சந்திப்பை அடைகிறார். அங்கு பேசும் அவர், வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பை அடைந்து அங்கும், ஜெ.ஜெ.நகர் சந்திப்பிலும் உரையாற்றுகிறார். இறுதியாக, மணலி சாலை எழில் நகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    இதன்பின், வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) தஞ்சாவூர் செல்லும் முதல்வர் ஜெயலலிதா, 10 ஆம் தேதியன்று அரக்கோணத்திலும், மே 12 ஆம் தேதியன்று திருநெல்வேலியிலும் உரையாற்றுகிறார் என அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai