Enable Javscript for better performance
இதுவரை ரூ. 81.85 கோடி பறிமுதல்: தமிழக தேர்தல் ஆணையர் தகவல்- Dinamani

சுடச்சுட

    
    Lakani

    சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய நாள் முதல் இதுவரை ரூ.  81.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:

    தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகளையொட்டி, தேர்தல் விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல் பறக்கும் படையும், நிலையான கண்காணிப்புக்குழுவும் மாவட்டங்களில் சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதன்படி 02.05.2016 அன்று பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டபோது, வேலூர் மாவட்டத்தில் 2.25 லட்சம் கைப்பற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.82.25 லட்சமும், விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 2.54 லட்சமும், மதுரை  மாவட்டத்தில் ரூ.32.60 லட்சமும், அரியலூர் மாவட்டத்தில் ரூ.6.93 லட்சமும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.1.11 லட்சமும் உள்பட மொத்தமா ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டது.

    மேலும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) சோதனையில் 02.05.2016 அன்று வேலூர் மாவட்டத்தில் ரூ.5.52 லட்சம் மதிப்பிலான கைத்தறி லுங்கிகள் மற்றும் ஆயத்த ஆடைகள், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3.60 லட்சம் ரொக்கம், இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.14 லட்சம், மதுரை மாவட்டத்தில் ரூ.2.26 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.40 லட்சம், அரியலூர் மாவட்டத்தில் ரூ.2.86 லட்சம் ரொக்கம், தேனி மாவட்டத்தில் ரூ.14.50 லட்சம், ஈரோடு மாவட்டத்தில் ரூ.2.90 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 30.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுவரை பறக்கும் படையினரால் ரூ.29.00 கோடியும், நிலையான கண்காணிப்புக்குழுவினரால் ரூ.31.00 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் வருமானவரித் துறையினர் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ.21.85 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த தொகையையும் சேர்த்து இதுவரை ரூ.81.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai