Enable Javscript for better performance
சிவகாசியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி: சிவகாசியில் 10 கிலோ கஞ்சா புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகாசியில் பெருமளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கும் சிறப்பு படை சார்பு ஆய்வாளர் வீரண்ணண் தலைமையில் போலீஸார் இங்கு சோதனை நடத்தினர்.

    போலீஸார் ரயிவே பீடர் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றுடன் வந்த ஒருவர் போலீஸாரை கண்டதும், வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். போலீஸார் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அந்த மூட்டையில்  கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி, வாகனத்தை ஓட்டி வந்த கங்காகுளம் வேல்முருகனை (66) கைது செய்தனர். அவர் அளித்த தகவல் பேரில் மேட்டமலை கபிரிவேல் (52), இந்திராநகர் சுப்பிரமணி(58), பொன்னுக்காளை மனைவி சண்முகக்கனி (55) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் வேல்முருகனிடம் கஞ்சா விலைக்கு வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து எதிரிகள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai