Enable Javscript for better performance
புதுவையிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுவையிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை

    By DN  |   Published on : 04th May 2016 06:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    BJP

    புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என பாஜக மாநில தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று வெளியிட்டார்.

    18 தலைப்புகளில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை விவரம்:

    கிராமங்களிலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதர மையங்களிலும் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்களை பரிசோதிக்க நவீன சாதனங்கள் வைக்கப்படும். டாக்டர்கள் எண்ணிக்கையை உயர்த்தி 24 மணி நேர மருத்துவ உதவி கிடைக்கும்.

    சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் ஆபத்தான தொழிற்சாலைகள் தடை செய்யப்படும். கொசுத்தொல்லையை ஒழிக்க முழு நடவடிக்கை எடுக்கப்படம். 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ பரிசோதனை, முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

    தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் அளித்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வர தடையாக உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    அரசு வேலைவாய்ப்புகள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் நிரப்பப்படும். அதை கண்காணிக்க உயர்மட்ட கமிட்டி அமைக்கப்படும். அதிக வேலைவாய்ப்பு தரும் பொதுத்துறை நிறுவனம் கொண்டு வரப்படும். டைடல்பார்க் அமைத்து சாப்ட்வேர் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

    உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சத இடஒதுக்கீடு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப் பகுதிகளில் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். மகளிருக்கு தனிபேருந்துகள் இயக்கப்படும்.

    மீனவருக்கு தனியாக நலவாரியம் ஏற்படுத்தப்படும். மீனவர் பிரச்சினையை தீர்க்க புதுச்சேரியில் வெளியுறவுத்துறை அலுவலகம் உருவாக்கப்படும்.

    ஜவுளி ஆலைகள் நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதுச்சேரியில் மின்துறையை மின்வாரியமாக மாற்றுவோம்.

    கோதாவரி ஆற்றுப்படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவை பயன்படுத்தி ஏனாம் பகுதியில் 230 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அரசு சார்பில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு தேவையான மின்சாரத்தை நாமே  தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    தனியார்பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும். கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், சிறுபான்மை மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு தரவேண்டிய 50 சதவீத மருத்துவ இடங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் மருத்துவ மற்றும் தொழில் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல் மருத்துவ படிப்பு வரை இலவசமாக வழங்க நடவடிக்கை புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். காரைக்காலில்ஜிப்மர் மருத்துவ கல்லூரி விரைவில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுற்றுலாவை மேம்படுத்த உயிரியல் பூங்கா அமைக்கப்படும்.  ஊழலை ஒழிக்க தகவல் உரிமை சட்டத்தை விரிவுப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

    புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வீடற்ற அனைவருக்கும் இலவச வீடுகள் வழங்கப்படும். புதுச்சேரியில் பூரண மதுவிலக்குக்காக பணியாற்றுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai