Enable Javscript for better performance
செம்பரம்பாக்கம் ஏரியை முறைகேடாக திறந்தவர்கள் மீது நடவடிக்கை: ஸ்டாலின் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    செம்பரம்பாக்கம் ஏரியை முறைகேடாக திறந்தவர்கள் மீது நடவடிக்கை: ஸ்டாலின் உறுதி

    By DN  |   Published on : 04th May 2016 06:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin Chennai

    சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தததும் சென்னை மழை வெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியை முறைகேடாக திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

    சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கு.க.செல்வத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: அதிமுக சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் காவல் நிலையத்துக்கு சென்று அதிகாரிகளை மிரட்டியவர். இந்நிலையில் காவல் துறையில் ஆளுங்கட்சி தலையீடே இல்லை என ஜெயலலிதா கூறி வருகிறார்.

    சென்னை மழை, வெள்ளத்தின் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை முறையாக திறக்கவில்லை.

    திமுக ஆட்சிக்கு வந்தததும் சென்னை மழை வெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியை முறைகேடாக திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சரியில்லை, பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை.

    எனக்கு அரசியல் வாழ்வு தந்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் திமுக வேட்பாளர் கு.க.செல்வத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai