Enable Javscript for better performance
அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு பதவியை கொடுத்து விடலாம்: அன்புமணி ஆதங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு பதவியை கொடுத்து விடலாம்: அன்புமணி ஆதங்கம்

    By DN  |   Published on : 15th May 2016 05:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani

    சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக, திமுகவினர் பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, 234 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

    தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றால், தொகுதியை அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு வழங்கிவிடாலம் என ஆதங்கத்துடன் கூறினார்.

    சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து, பண விநியோகம் குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 மாதங்களாக மக்களைச் சந்தித்து தேர்தலுக்காக ஆதரவு திரட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணத்தை வழங்கி வருகின்றனர்.

    ரூ. 500 முதல் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த கேவலமான கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது.

    கருணாநிதி போட்டியிடும் திருவாரூர், ஜெயலலிதா போட்டியிடும் ராதாகிருஷ்ணன் நகர், ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் பணம் விநியோகிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடைபெறுகிறதா?

    தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றால், தொகுதியை அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு வழங்கிவிடாலம். அதிகாரம் இல்லாத ஆணையமாக தேர்தல் ஆணையம் உள்ளது. பல புகார் மீது நடவடிக்கை இல்லை.

    எனவே, தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, வெளி மாநில அதிகாரிகளைக் கொண்டு நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் வெளிமாநில அதிகாரிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமித்து தேர்தலை நடத்த வேண்டும்.

    திருப்பூரில் பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் அன்புமணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai