Enable Javscript for better performance
அரவக்குறிச்சிக்கு மே 18-ல் தேர்தல் நடத்த வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    அரவக்குறிச்சிக்கு மே 18-ல் தேர்தல் நடத்த வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

    By சிதம்பரம்  |   Published on : 15th May 2016 07:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thiruma1

    சிதம்பரம்: அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலை மே 18-ம் தேதி நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக, தமாகா, மக்கள்நல கூட்டணி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுணிவு. இந்த தேர்தலில் வியாபாரிகள், சாதாரண மக்கள் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம் அதிமுக, திமுக கொண்டு சென்ற கோடிக்கனக்கான பணத்தை கைப்பற்றாதது புரியாத புதிராகவே உள்ளது.

    அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைப்பதற்கு ஊழல் முறைகேடுகள் காரணம். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முடிந்து மே 23-ந்தேதி அங்கு தேர்தல் நடத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. மே 19ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அதற்கு முன்னதாக 18 ஆம் தேதி தேர்தல் நடத்த வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும்.

    வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறார்கள் என்ற நிலை வந்த பிறகு அரவக்குறிச்சி தேர்தல் நடந்தால் அது வெற்றி பெற்றவர்களுக்கு சாதகமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் மே.18ந் தேதி வாக்கு பதிவு நடைபெற வேண்டும். அது நியாயமான, ஜனநாயமான செயலாகும். இதைனை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    மக்கள்நல கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டும் அல்லாமல், மற்ற கட்சி தலைவர்களும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கையாக இதனை வைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கருப்பு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது தேர்தல்ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இங்கு தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் மற்ற தேர்தல் அதிகாரிளின் செயல்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் சுமார் 1 கோடி பேர்கள் வாக்குக்கு பணம் கொடுப்பதை அறுவெறுப்பாக பார்கின்றனர். எனவே புதிய வாக்காளர்கள் 100 சதவீகிதம் எங்கள் அணிக்கே வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றேன். மக்கள் நல கூட்டணியில் உள்ள தலைவர்களான நானும் கேப்டன் விஜயகாந்தும் தோற்கக்கப்பட வேண்டும் என்பதற்காக உளுந்தூர்பேட்டையிலும், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் குறிவைத்து வேலை செய்கின்றனர் என தகவல்கள் வருகின்றன.

    ஆனால் இதனையும் மீறி சாதாரண பொதுமக்கள், கட்சி சாராதவர்கள் எங்கள் வெற்றி பெற வைப்பார்கள்.234 தொதிகளிலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்கள் அரங்கேறி உள்ளன குறிப்பாக ஆர்.கே நகர் தொகுதியில் வேறு தொகுதியை சார்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து உள்ளனர். எல்லா அத்துமீறல்கள் அரிகாரிகள் துணையோடு,தேர்தல் ஆணையத்தின் முன்னரே நடைபெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் அரவக்குறிச்சியை காட்டிலும் அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai