Enable Javscript for better performance
அரவக்குறிச்சி தேர்தலை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக நடத்த சிபிஐ கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அரவக்குறிச்சி தேர்தலை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக நடத்த சிபிஐ கோரிக்கை

    By DN  |   Published on : 15th May 2016 03:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    CPI

    சென்னை: தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தேர்தலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 19 ஆம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

    தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஏராளமான அளவில் பண விநியோகம் நடைபெற்று வருகிறது. இது தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஏராளமான பணம் செலழிக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரும் கூறியுள்ளார்.

    இந்நிலையில் அதிக அளவில் பண விநியோகம் நடைபெற்றதாகக் கூறி கருர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பிற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வெளியாகும் முடிவுகள் அரவக்குறிச்சி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்

    எனவே, அரவக்குறிச்சியில் மே 19 ஆம் தேதிக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் முத்தரசன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai