Enable Javscript for better performance
ஓட்டுப்போடாமல் விடுவது சந்ததிப்பிழையாகி விடும் :நடிகர் பார்த்திபன் - Dinamani

சுடச்சுட

    

    ஓட்டுப்போடாமல் விடுவது சந்ததிப்பிழையாகி விடும் :நடிகர் பார்த்திபன்

    By dn  |   Published on : 15th May 2016 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைய ஆரம்பித்து இருக்கிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்பது எனது விருப்பம் என்று நடிகர் பார்த்திபன் கூறினார். மேலும் இதுகுறித்து  அவர் செய்தியாளரகளுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    ‘‘நான் எந்த கட்சியையும் சாராதவன். இந்த தேர்தலில் நிறைய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சுயேச்சைகளாகவும் தகுதி படைத்த பலர் நிற்கிறார்கள். தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால், தேர்தல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைய ஆரம்பித்து இருக்கிறது.

    ஏற்கனவே பல தடவை ஓட்டு போட்டு எதுவும் நடக்கவில்லையே என்ற விரக்தியில் இருக்கிறார்கள். இதற்காக யாரும் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது. ஓட்டுப்போடாமல் விடுவது சந்ததிப்பிழையாகி விடும். தகுதி உள்ளவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள்.

    தகுதி இல்லாதவர்கள் என்று கருதினால் நோட்டாவில் வாக்கை பதிவு செய்யுங்கள். பொய்மை அரசியல்வாதிகளுக்கு இதன் மூலம் சவுக்கடி கொடுங்கள்.ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. பணத்தை வைத்து ஜெயிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு கரும்புள்ளி குத்தி அவர்களை செல்லா நோட்டு ஆக்குங்கள். 8 சதவீதம் பேர் நாட்டின் 92 சதவீதம் வளத்தை சுரண்டுபவர்களாகவும் 92 சதவீதம் மக்கள் வறுமையில் உழல்பவர்களாகவும் இருக்கும் நிலைமை மாற வேண்டும்.

    ஊழல் வேட்பாளர்கள் தொகுதிகளில் நோட்டாவில் வாக்குப்பதிவு செய்து அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் செய்யுங்கள். இதன்மூலம் ஊழல் அரசியல் வாதிகள் குழம்பி தவிக்கட்டும். அடுத்து தேர்தல் வந்தால் அதற்கும் அவர்கள் பணத்தை செலவு செய்து அதன் மூலம் அவர்களின் கஜானா காலியாகட்டும். அரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும். நம் தேசம் காக்க.

    இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai