Enable Javscript for better performance
கட்சி விரோத செயல்பாடு: விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கட்சி விரோத செயல்பாடு: விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்

    By dn  |   Published on : 15th May 2016 01:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்ட அறிக்கை:

    ஊசுடு தொகுதியில் கட்சியின் வேட்பாளராக தேவ.பொழிலன் போட்டியிடும் நிலையில் கட்சியின் பொறியாளர் அணி மாநில செயலாளர் தொண்டமாநத்தம் த.பார்வேந்தன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை துணை அமைப்பாளர் கரசூர் சிலம்பரசன், ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர் தீப்பாஞ்சானுக்கு ஆதரவாக பணிபுரிவது தெரிய வந்துள்ளது.

    அதே போல் ஊசுடு தொகுதி முற்போக்கு மாணவர் கழக அமைப்பாளர் தொண்டமாநத்தம் அமுதகுமார் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதனுக்கு தேர்தல் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இவர்கள் மூவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே கட்சி நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றார் தேவ.பொழிலன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai