Enable Javscript for better performance
காதோடுதான் - தேர்தல் கிசு கிசு: அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு?- Dinamani

சுடச்சுட

    

    காதோடுதான் - தேர்தல் கிசு கிசு: அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு?

    By dn  |   Published on : 15th May 2016 01:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ele

    சட்டப் பேரவைத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார். மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

    அந்த சந்திப்பு குறித்து' அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவும் இல்லை' என்று மீடியாக்களிடம் கருத்துச்சொன்னார் ஸ்டாலின். இந்நிலையயில் கடந்த சில நாட்களுக்கு முன் 'மதுரையில் திமுக பத்து தொகுதியிலும் தோற்கும்' என்று கொதிப்பை வெளிப்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மீடியாக்களிடம் அழகிரி வாயை திறக்க வேண்டாம்.  அவர் வாய் திறந்தால் வில்லங்கம் வருமென்று கருணாநிதி தரப்பில் செல்வியிடம் முறையிட்டனர்.

    மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதி இரண்டு நாட்களாக மதுரையில் முகாமிட்டு பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரமும் செய்தார். ஆனால் அழகிரி தரப்பினரை கருணாநிதி பார்க்காததால் அழகிரியின் ஒட்டு மொத்த குடும்பமும் கோபத்திற்குள்ளாகினர். இதனால் 'கட்சியை தாண்டி பேரன் பேத்திகளை பார்க்கக் கூட மனமில்லையா' என அழகிரி தரப்பு எரிச்சலடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,' நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று கூறிதாக தெரியவந்துள்ளது.  அழகிரியின் இந்த முடிவால் திமுக தலைமை கடைசி நேரத்தில் அழகிரியால் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai