Enable Javscript for better performance
நாளை சட்டப்பேரவைத் தேர்தல்: பாதுகாப்பு பணியில் 1.32 லட்சம் போலீஸார்- Dinamani

சுடச்சுட

    

    நாளை சட்டப்பேரவைத் தேர்தல்: பாதுகாப்பு பணியில் 1.32 லட்சம் போலீஸார்

    By dn  |   Published on : 15th May 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 16) நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.

    இது குறித்த விவரம்:

     மே மாதம் 16-ஆம் தேதி (திங்கள்கிழமை)  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.  தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கடந்த இரு மாதங்களாக திட்டமிட்டு வந்தது. தேர்தலை எவ்வித பிரச்னையும் இன்றி, அமைதியாக நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பதற்றமான வாக்குச் சாவடிகள் அதிகரித்திருப்பதின் விளைவாக, துணை ராணுவத்தினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

     மாநிலம் முழுவதும் சட்டப்பேரவைத் பாதுகாப்பு பணிக்காக 1.32 லட்சம் போலீஸôர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் துணை ராணுவப் படை வீரர்கள் ஆவார்கள். சென்னை தவிர்த்து 31 மாவட்டங்களிலும், 6 மாநகர காவல்துறை பகுதியிலும் 1.20 லட்சம் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இங்கு 28,005 இடங்களில் உள்ள 58,468 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் 3,653  வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் துப்பாக்கியுடன் கூட 4 துணை ராணுவ படை வீரர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

      துணை ராணுவத்தினர், போலீஸôர் தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர், ஓய்வு பெற்ற வன காவலர் ஆகியோர் சுமார் 35 ஆயிரம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். 5,142 ரோந்து வாகனங்களில் போலீஸôர் ரோந்து வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். 514 வாகனங்களில் அதிரடிப்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.  இவர்கள், ஏதாவது ஒரு பகுதியில்  பிரச்னைகள் ஏற்பட்டால், அங்கு விரைந்து சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்வார்கள். இதேபோல காவல் துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்,டி.ஐ.ஜி.,ஐ.ஜி. ஆகியோருடன் 1,153 வாகனங்களில் அதி விரைப்படையினர் இருப்பார்கள்.

      இதேபோல 488 இரவு ரோந்து குழுக்கள், 776  பறக்கும் படை குழுக்கள் என மாநிலம் முழுவதும் 7,094 குழுக்களாக போலீஸôர் 24 மணி நேரமும் ரோந்து பணியிலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவார்கள்.

      மாநிலத்தில் 6,300  பகுதிகள் பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல அதிக பண புழக்கம் உள்ள கண்டறியப்பட்டுள்ள 94 தொகுதிகளிலும், அதிகமான போலீஸôர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

     மாநிலம் முழுவதும் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் பிரிவு டி.ஜி.பி. கே.பி.மகேந்திரன், ஏ.டி.ஜி.பி. சி. சைலேந்திரபாபு ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் 24  சட்டப்பேரவைத் தொகுதி முழுமையாகவும், 6 சட்டப்பேரவைத் தொகுதியாக பகுதியாகவும் உள்ளன. இங்கு தேர்தலையொட்டி, 12,500 போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    298 இடங்களில் உள்ள 7552 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெருநகர காவல்துறை செய்துள்ளது. 298 வாக்குச்சாவடி பகுதிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக 18 கம்பெனியைச் சேர்ந்த 1,360 துணை ராணுவப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு கம்பெனி, பெண்கள் படைப் பிரிவைச் சேர்ந்தது ஆகும்.

     420  வாகனங்களில் 4,500  அதிரடிப்படை படை வீரர்கள் ரோந்து வருவார்கள். தேர்தலுக்காக 4  தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படும். தேர்தல் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லா தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

     சென்னையில் 4 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 21 துணை ஆணையர்கள், 78 உதவி ஆணையர்கள், 310 ஆய்வாளர்கள் ஆகியோர் போலீஸôருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் அனைவரும், சென்னையில் உள்ள ஆயுதப்படை மைதானங்களுக்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேண்டம் முறையில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டது. பின்னர் அவர்கள், வாக்குச்சாவடிகளுக்கு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகத்துக்கு வாக்குச்சாவடிக்கு தேவையான பொருள்களுடன் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

     இந்த பணி காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.  இவர்களும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் அரசு ஊழியர்களும் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எந்திரம்,வாக்காளர்கள் விரல்களில் வைக்கப்படும் மை உள்ளிட்ட பொருள்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai