Enable Javscript for better performance
நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம்: தமிழிசை- Dinamani

சுடச்சுட

    
    tamilisai

    சென்னை: தமிழக வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்காமல் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

    சென்னையில் இன்று மாலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    வெற்றி பெறுவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இல்லாமல், நல்ல வேட்பாளர்களை அறிந்து வாக்களிக்க வேண்டும்.

    மேலும், நோட்டாவுக்கு வாக்களிக்காமல், நல்லவர்களை தேடிப்பிடித்து வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் பண மழை பெய்து வருகிறது. பண சுனாமியே தமிழகத்தை தாக்கியுள்ளது.

    தமிழகத்தில் நிலவும் ஒட்டுமொத்த சூழ்நிலையின்வெளிப்பாடுதான் அரவக்குறிச்சி. ஊழல் செய்தால் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலையில், அரவக்குறிச்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழிசை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai