Enable Javscript for better performance
பணம் பட்டுவாடா: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பணம் பட்டுவாடா: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

    By dn  |   Published on : 15th May 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tnec

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் மே 23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.

    இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

    கே.சி.பழனிச்சாமிக்குச் சொந்தமான வீடுகளிலும், அலுவலகங்களிலும் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.  இதன்பேரில், கரூர் அண்ணா நகரில் உள்ள வீடு, ஜவஹர் பஜாரில் உள்ள விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் சோதனை நடத்தினர்.

    இதேபோல், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சிவராமனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. முடிவில் கணக்கில் வராத ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.  இந்திய தேர்தல் வரலாற்றில் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் ஒரு சட்டசபை தொகுதியில் தேர்தலையே ஒத்திவைப்பது என்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai