Enable Javscript for better performance
பாமக வேட்பாளர் பாலு மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக பாமக வேட்பாளர் பாலு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் புகார் அளித்திருந்தார். 

    அவரது புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து  பொதுமக்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பாமக வேட்பாளர் பாலு தேர்தல்  அலுவலர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது திடீரென சுமார் 30,000 ரூபாய் ரொக்க பணத்தை மேசை மீது வீசி வாக்கு வாதம் செய்தார், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாலு உட்பட 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பாலு மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai