Enable Javscript for better performance
பிரதான கட்சிகள் கொடுக்க முன்வந்த பல கோடிகளை மறுத்தவர் விஜயகாந்த்: சங்கரய்யா புகழாரம்- Dinamani

சுடச்சுட

    

    பிரதான கட்சிகள் கொடுக்க முன்வந்த பல கோடிகளை மறுத்தவர் விஜயகாந்த்: சங்கரய்யா புகழாரம்

    By dn  |   Published on : 15th May 2016 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sankaraya

    தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முகமாக, அ.தி.மு.க, தி.மு.க, பி.ஜே.பி உள்ளிட்ட பிரதான கட்சிகள் கொட்டிக் கொடுக்க முன் வந்த பல கோடிகளை மறுத்தவர் விஜயகாந்த் என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

    பெரம்பூர் பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அ.தி.மு.க, தி.மு.க, பி.ஜே.பி உட்பட பிரதான கட்சிகள், கூட்டணிக்காக,  பல கோடிகளை கொட்டிக் கொடுக்க முன்வந்ததை நேற்று ஒரு இணையத்தளத்திற்கு கொடுத்த பேட்டியில் விஜயகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

    பணத்துக்கு விலை போகாத அவர்,  மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அவரின் நம்பிக்கை பொய்யாகாது. இந்தத் தேர்தலில் நாங்கள் தான் பெரும்பான்மை இடங்களிலே வெற்றி பெறுவோம். விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தாதுமணலை அரசுடமையாக்குவோம்.

    எல்லோருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்வோம்.  மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது எனத்திட்டமிட்டு பெரு முதலாளிகள், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனர். மக்கள் இவற்றை நம்பக் கூடாது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai