Enable Javscript for better performance
புதுவையில் மதுபானக்கடைகள் நேரத்தை குறைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் மதுபானக்கடைகள் நேரத்தை குறைக்க வலியுறுத்தல்

    By dn  |   Published on : 15th May 2016 01:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

    அதன் பொதுச் செயலாளர் இரா.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கை:

    தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தலில் வென்றால் மதுபானக்கடைகளை மூடுவோம் என அறிவித்துள்ளன. பெண்கள், உள்ளிட்ட வாக்காளர்கள் இதற்காகவே சில கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் புதுவையில் அரசியல் கட்சிகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிரெஞ்சு கலாசாரம் எனத்தெரிவிக்கின்றனர். தமிழகத்தை போலவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை போன்றவை நடக்க முக்கிய காரணம் புதுவையில் மதுபானம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    தமிழகத்தை போல் இல்லாமல் புதுவையில் காலை 8 மணிக்கே மதுபானக்கடைகளை திறந்து இரவு 12 மணி வரையும், சாராயக் கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதால் பேரழிவு ஏற்படுகிறது.

    தற்போது தேர்தல் ஆணைய உத்தரவின்படி காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இதனால் குற்றங்கள் ஒரளவு குறைந்துள்ளன. காலை 8 மணிக்கே மதுபானக்கடைகளை திறப்பதால் வேலைக்கு செல்வோர் மதுவை அருந்தி விட்டு வேலைக்கு செல்லாத நிலை உள்ளது.

    இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருப்பதால் வெளியூரில் இருந்து வருவோர் மது அருந்தி விட்டு நடைபாதைகளிலேயே மயங்கி விழுந்து தங்கள் உடமைகளை இழந்து விடுகின்றனர்.

    இதனால் சுற்றுலாவும் பாதிக்கப்படுகிறது. எனவே கலால் துறை மதுபான கடைகளை காலை 10 மணி முதல் இரவ 10 மணி வரை தான் என நிரந்தரமாக உத்தரவிட வேண்டும். சாராயக் கடைகளும் இதே நேரத்தில் மட்டுமே இயங்க உத்தரவிட வேண்டும்.

    இல்லையென்றால் மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முருகானந்தம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai