Enable Javscript for better performance
ரூ. 570 கோடி பணம்: பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வருமான வரித் துறை கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 570 கோடி பணம்: பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வருமான வரித் துறை கோரிக்கை

    By DN  |   Published on : 15th May 2016 06:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    TPR CASH

    சென்னை: திருப்பூரில் நேற்று பிடிப்பட்ட ரூ. 570 கோடி பணத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என வருமான வரித் துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    கோவையிலிருந்து 3 கன்டெய்னர் லாரிகளில் ஆந்திரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடியை திருப்பூர் அருகே தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனர். இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு உரியது என்பதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அந்த 3 கன்டெய்னர் லாரிகளையும், பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என வருமான வரித் துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai