Enable Javscript for better performance
வாக்களிக்க ஆதார் அட்டையை ஆவணமான பயன்படுத்தக்கூடாது- Dinamani

சுடச்சுட

    
    adhar

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடக்க உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உணவு இடைவேளையின்றி மாலை 6 மணி வரை, அதாவது 11 மணி நேரம் தங்குதடையின்றி வாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்குப்பதிவுக்கு முன், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் காட்ட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அல்லது புகைப்படம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

    இதன்படி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவு அடிப்படையில் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை, பணியாளர் நலத்துறை வழங்கிய காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகார அடையாள அட்டை ஆகிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

    மேலும் ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக, பயன்படுத்தி வாக்களிக்க தேர்தல்கஆணையம் அனுமதியளிக்க வில்லை. ஆகவே வாக்காளர்கள் ஆதார் அட்டையை, அடையாள ஆவணமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai