Enable Javscript for better performance
வாக்களிக்க வர இயலவில்லை: மன்னிப்புக் கோரிய நடிகர் சூர்யா- Dinamani

சுடச்சுட

    

    வாக்களிக்க வர இயலவில்லை: மன்னிப்புக் கோரிய நடிகர் சூர்யா

    By DN  |   Published on : 15th May 2016 04:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    actor surya

    சென்னை: அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நடிகர் சூர்யா, தன்னால் வாக்களிக்க வர இயலவில்லை என்றும், அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

    தமிழகத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு விளம்பர படங்களையும் தயாரித்துள்ளது.

    அதில் ஒரு விளம்பரப் படத்தில் நடிகர் சூர்யா தோன்றி அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில், திரைப்பட படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள சூர்யா, தன்னால் தேர்தலில் வாக்களிக்க இயலாது என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    24 படத்துக்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும் ஆதரவுக்கும் எனது மனபூர்வமான நன்றி. நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னுடைய மன்னிப்பையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அதற்காக அனைவரிடமும் மனபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான்.

    இதுவரை ஒரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையை செலுத்தாமல் நான் இருந்ததே இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல் நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற பயணத்திட்டம் வைத்திருந்தேன். ஆனால், நானே எதிர்பார்க்காத சூழல் என் பயணத்தைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள இயலவில்லை.

    என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சம் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். சட்டபூர்வமான வழிகள் ஏதும் இல்லை.

    மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதிற்காக அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மனபூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னை புரிந்து கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai