Enable Javscript for better performance
வாக்களித்துவிட்டு டுவிட் செய்தால் அஸ்வின், தினேஷ் கார்த்திக் \\\'ஆட்டோகிராப்\\\'- Dinamani

சுடச்சுட

    

    வாக்களித்துவிட்டு டுவிட் செய்தால் அஸ்வின், தினேஷ் கார்த்திக் 'ஆட்டோகிராப்'

    By DN  |   Published on : 16th May 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ECI dinesh1

    சென்னை: தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு செய்துவிட்டு அதுகுறித்து டுவிட் செய்தால், கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் கையெழுத்திட்ட படம் அனுப்பிவைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், 100 சதவீத வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்கள் வாக்களித்தப் பின்னர் `#IVotedTN', `#வாக்களித்தேன்' என்ற ஹேஸ்டேக்குகளில் டுவிட் செய்தால், தேர்தல் ஆணையத்தின் தூதுவர்களாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா பல்லிகல், சித்தார்த் நாராயணன் ஆகியோர் கையெழுத்திட்ட புகைப்படம் வாக்காளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ashwin.jpg

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai