Enable Javscript for better performance
வாக்கு எண்ணிக்கை மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமிராக்கள் - Dinamani

சுடச்சுட

    

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமிராக்கள்

    By dn  |   Published on : 15th May 2016 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் இணைய வழி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.

    நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம் ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியிலும், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியிலும் நடைபெறுகின்றன.

    இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில், ஆட்சியர் சு. பழனிசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெ. கண்ணன் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    வாக்குப் பெட்டிகள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறுமிடத்தில் உள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, வாக்கு எண்ணும் பணியை தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி.

    மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் சுபாநந்தினி, மயிலாடுதுறை வட்டாட்சியர் பெருமாள், சீர்காழி வட்டாட்சியர் டி. சண்முகம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai