சுடச்சுட

  

  ஒரத்தநாடு திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி

  By ஜங்ஷன் - intro  |   Published on : 19th May 2016 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dmk

  தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதல் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான வைத்திலிங்கத்தை பின்னுக்கு தள்ளி, திமுக வேட்பாளர் எம். ராமச்சந்திரன் 3642 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  ஒரத்தநாடு ஒன்றியத்தின் 58 ஊராட்சிகள், தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 19 ஊராட்சிகள், தஞ்சாவூர் ஒன்றியத்தின் 19 ஊராட்சிகள்,

  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தின் கல்விராயன்விடுதி ஊராட்சி மற்றும் ஒரத்தநாடு போரூராட்சியை உள்ளடக்கிய தொகுதி.

  கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 6 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலிலும்,

  கடைசியாக நடைபெற்ற 2011 தேர்தலிலும் தொடர்ந்து தொகுதியை தக்கவைத்துக் கொண்டு வந்த அதிமுகவின் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் இந்த முறை திமுக வே்ட்பாளர் எம். ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்துள்ளார்.

  2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்:

  எம். ராமச்சந்திரன் திமுக

  ஆர். வைத்திலிங்கம் அதிமுக

  பா. ராமநாதன்வ தேமுதிக

  மா. சரவண ஐயப்பன் பாமக

  தி. கேசவன் பாஜக

  மு. கந்தசாமி நாம் தமிழர்

   

  தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1971 - 2011 )

  1971 எல். கணேசன் திமுக

  1977 டி. எம். தைலப்பன் திமுக

  1980 தா. வீராசாமி காங்கிரஸ்

  1984 தா. வீராசாமி அதிமுக

  1989 எல். கணேசன் திமுக

  1991 அழகு. திருநாவுக்கரசு அதிமுக

  1996 பி. இராஜமாணிக்கம் திமுக

  2001 ஆர். வைத்திலிங்கம் அதிமுக

  2006 ஆர். வைத்திலிங்கம் அதிமுக

  2011 ஆர். வைத்திலிங்கம் அதிமுக

  2016 எம். ராமச்சந்திரன் திமுக 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai