சுடச்சுட

  

  நாகை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலைப் பெற்றுள்ளது. நாகப்பட்டினம் : நாகை தொகுதியின் 4-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக (மஜக) வேட்பாளர் எம். தமிமுன் அன்சாரி 3,976 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

  வாக்குகள் விவரம் : எம். தமிமுன் அன்சாரி (அதிமுக)- 15,672. எம். ஜபருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)- 11,696. அதிமுக முன்னிலை - 3,976. மயிலாடுதுறை : மயிலாடுதுறை தொகுதியில் 8-ஆம் சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் வீ. ராதாகிருஷ்ணன் 3,004 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். வாக்கு விவரம் : வீ. ராதாகிருஷ்ணன் (அதிமுக)- 29,558. க. அன்பழகன் (திமுக)- 26,554. அதிமுக முன்னிலை -3,004. சீர்காழி : சீர்காழி தொகுதியில் 8 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி 5,494 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

  வாக்குகள் விவரம் : பி.வி. பாரதி (அதிமுக) - 30,515. திமுக- 25,021. அதிமுக முன்னிலை - 5,494. பூம்புகார் : பூம்புகார் தொகுயில் 15 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜ் 14,830 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். வாக்குகள் விவரம் : எஸ். பவுன்ராஜ் (அதிமுக)- 60,490. ஏ.எம். ஷாஜஹான் (திமுக- ஐயுஎம்எல்) - 45,660. அதிமுக முன்னிலை- 14,830. வேதாரண்யம் : வேதாரண்யம் தொகுதியில் 8 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ். மணியன் 16,140 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.

  வாக்கு விவரம் : ஓ.எஸ். மணியன் (அதிமுக)- 31,957. பி.வி. ராசேந்திரன் (காங்கிரஸ்)- 31,957. அதிமுக முன்னிலை- 16,140. திமுக முன்னிலை கீழ்வேளூர் : கீழ்வேளூர் தொகுதியில் 7 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் உ. மதிவாணன் 4,692 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். வாக்கு விவரம் : உ. மதிவாணன் (திமுக) - 31,136. என். மீனா (அதிமுக)- 26,444.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai