முகப்பு அனைத்துப் பிரிவுகள் தமிழகத் தேர்தல் களம் 2016
அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் முன்னிலை விவரம்
By ஜங்ஷன் - intro | Published On : 19th May 2016 12:04 PM | Last Updated : 19th May 2016 12:04 PM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதல் அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் சரத்குமார் தொடர்ந்து பின்னிலையில் உள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் மதுராந்தகம் (தனி) வேட்பாளர் செ.கு.தமிழரசன் பின்னிலையில் இருந்து வருகிறார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்செந்தூர் வேட்பாளர் சரத்குமார் தொடர்ந்து பின்னிலையில் இருந்து வருகிறார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் காங்கேயம் வேட்பாளர் உ.தனியரசு தொடர்ந்து முன்னிலை இருந்து வருகிறார்.
மனித நேய ஜனநாயக கட்சியின் நாகப்பட்டினம், ஒட்டன் சத்திரம் வேட்பாளர் தமிமுன் அன்சாரி பின்னிலை இருந்து வருகிறார்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் வேட்பாளர் ஷேக் தாவூத் பின்னிலை இருந்து வருகிறார்.
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் திருவாடானை வேட்பாளர் கருணாஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.