முகப்பு அனைத்துப் பிரிவுகள் தமிழகத் தேர்தல் களம் 2016
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பின்தங்கும் பிரபலங்கள்
By dn | Published On : 19th May 2016 11:12 AM | Last Updated : 19th May 2016 11:12 AM | அ+அ அ- |

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி அதிமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆனால், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய அன்புமணி, விஜயகாந்த் உட்பட பல பிரபலங்கள் பின்தங்கியுள்ளனர.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக வேட்பாளர் ஜெ. குரு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் பின்தங்கியுள்ளார்.
அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோகுல இந்திரா பின்தங்கியுள்ளார்.
முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்தங்கியுள்ளார்.
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜெ குரு பின்தங்கியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தொடர்ந்து பின்தங்கியுள்ளார்.
கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டார். இவரும் பின்தங்கியுள்ளார்.
பாமக முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய அன்புமணி பென்னாகரம் தொகுதியில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 3வது இடத்தில் உள்ளார்.