வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

இந்திய மருத்துவக் கல்வி சேர்க்கை: காலியிடங்கள் பட்டியல் வெளியீடு

DIN | Published: 11th September 2018 09:35 AM

இந்திய மருத்துவக் கல்வியை பெற கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு, அங்கு காலியாக இருக்கும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கான நடைமுறை ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. இதன்பிறகும் காலியாக இடங்களின் பட்டியலை நிரப்ப அடுத்தக்கட்ட சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்கள்   ‌w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
இந்த இடங்களை நிரப்புவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை செலுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது. அதன்படி, செப். 1 முதல் 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை செலுத்திய மாணவர்கள், செப். 14-ஆம் தேதி சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 
இதன்பிறகு, மாணவர்கள் தெரிவுசெய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். அதற்கான நடைமுறை செவ்வாய்க்கிழமை (செப்.11) நண்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. செப். 16-ஆம் தேதி காலை 10 மணி வரை விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை மாணவர்கள் பதிவுசெய்யலாம். 
இதனடிப்படையில், செப். 16-ஆம் தேதி மாலை 4 மணிக்கு w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் மாதிரி சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் கல்லூரி வாரியாக, பாடப் பிரிவுவாரியாக கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதை மாணவர்கள் அறியலாம். இடங்கள் ஒதுக்கியதில் திருப்தி அடைந்த மாணவர்கள் செப். 17 முதல் 19-ஆம் தேதி வரை இணையதளத்தில் அதை உறுதி செய்யலாம். சேர்க்கை உறுதி சான்றிதழை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொண்டு, செப். 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று சேர்க்கை பெறலாம்.

More from the section

கோலார் தங்கவயலில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
லஞ்சம்: கிராமப் பஞ்சாயத்து கணக்காளர் கைது
மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை
கர்நாடகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜ.க. தோல்வி
பாஜக எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்துள்ளது ஏன்? குமாரசாமி கேள்வி