சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

செப். 16-இல் கர்நாடக தமிழ் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்

DIN | Published: 11th September 2018 09:36 AM

கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சிவமொக்காவில் செப். 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக தமிழ் அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஊப்ளி அ.தனஞ்செயன் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சிவமொக்காவில் உள்ள தமிழ்த்தாய் சங்கத்தில் செப். 16-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமை தாங்க, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் கு.புகழேந்தி முன்னிலை வகிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் கர்நாடகத் தமிழர்களின் இன்றைய நிலை, மாவட்டங்களில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தமிழர்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துதல், தமிழ்க் கல்வி, பண்பாடு, கலை ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ஹாசன், மங்களூரு, குடகு, தாவணகெரே, சிக்கமகளூரு, சிமோகா, தார்வாட், பெல்லாரி, பெலகாவி, கோலார், சாமராஜ்நகர், சித்ரதுர்கா, தென் கன்னடம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறவர்கள் தங்கள் பெயரை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள ஊப்ளி அ.தனஞ்செயன்-9483755974, தி.கோ.தாமோதரன்-9449485903, கு.புகழேந்தி-9488793322 ஆகியோரை தொடர்புகொள்ளலாம். திரைப்படம், அரசியல், சாதி தொடர்புடைய அமைப்புகள் நீங்கலாக, தமிழர் கலை, பண்பாடு, இலக்கியம், கல்வி, ஆன்மிகம், சமூகம், பொருளாதாரம் தொடர்புடைய அமைப்புகள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
 

More from the section

பிப். 28-இல் அறிவியல் பயிலரங்கம்
தள்ளுவண்டி வியாபாரி இரும்பு கம்பியால் தாக்கிக் கொலை
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேர் கைது
ஒருநாளுக்கு முன்பாகவே சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவு
பைக் மீது வாகனம் மோதல்: இளைஞர் சாவு