புதன்கிழமை 23 ஜனவரி 2019

மனைவியின் தலையுடன் காவல் நிலையத்தில் கணவர் சரண்

DIN | Published: 11th September 2018 09:36 AM

வேறொருவருடன் இருந்த மனைவியை கொலை செய்த கணவர், அவரது தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தும்கூரு மாவட்டம், தரிகெரே வட்டம், அஜ்ஜாபுரா அருகே ஷிவானி ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் சதீஷ் (33). இவரது மனைவி ரூபா (28). ஓட்டுநராக பணியாற்றி வந்த சதீஷ் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ரூபாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்த நிலையில், சதீஷ் ஓட்டுநர் தொழிலை விட்டுவிட்டு, இறைச்சிக் கடை நடத்தி வந்தாராம்.
இந்த நிலையில், ரூபாவுக்கு, அதே பகுதியில் வசித்த வரும் சுனில் என்பவருடன் தகாத தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைக்கு சென்ற சதீஷ், மாலை வீட்டுக்கு திரும்பி வந்தாராம். அப்போது, வீட்டில் ரூபாவுடன் சுனில் இருந்ததைக் கண்ட சதீஷ், தனது கையில் இருந்த அரிவாளை வீசினாராம்.
இதனையடுத்து சுனில் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார். கீழே விழுந்த அரிவாளை எடுத்து ரூபாவின் கழுத்தை அறுத்த சதீஷ், தலையுடன் 20 கி.மீ. தொலைவில் உள்ள அஜ்ஜனாபுரா காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். இதையடுத்து, சதீஷைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

More from the section

ராணுவத்தில் தொழில்பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தெய்வத்தின் மனித வடிவம் சிவக்குமார சுவாமிகள்
சிவக்குமார சுவாமிகள் லிங்கைக்கியமானார்: தலைவர்கள் இரங்கல்
ஆனந்த்சிங் எனது அண்ணனை போன்றவர், அவரை நான் தாக்கவில்லை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ்
"தமிழர்களின் பாதுகாப்புக்கு பாடுபட்டவர் சண்முகசுந்தரம்'