செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

அரசு தொழில் பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை

DIN | Published: 12th September 2018 08:27 AM

அரசு தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பெங்களூரு- ஒசூர் சாலையில் உள்ள அரசு மாதிரி தொழில் பயிற்சி மையத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நடக்கவிருக்கிறது. கணினி நிரல் உதவியாளர்-16 இடங்கள், டிரெஸ் மேக்கிங்-11 இடங்கள், வெல்டர்-56 இடங்கள், டிராட்ஸ்மேன் சிவில்-17 இடங்கள், டிராட்ஸ்மேன் மெக்கானிக்-15 இடங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பராமரிப்பு-16 இடங்கள், டூல் அண்ட் டைமேக்கர் (ஜிக்ஸ் அண்ட் ஃபிக்ஷர்ஸ்)-3, டர்னர் 9 இடங்கள் ஆகமொத்தம் 143 இடங்கள் காலியாக உள்ளன. ஓராண்டு பயிற்சிக்கு ரூ.1,500, ஈராண்டு பயிற்சிக்கு ரூ.1,750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 080 - 26562307 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

இன்று குடிநீர் குறைதீர் முகாம்
அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவிநீக்க விவகாரம்: பேரவைத் தலைவரின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்: சித்தராமையா
மக்களவைத் தேர்தல்: கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்று காங்கிரஸ் ஆலோசனை
சமூக அமைதியை சீர்குலைப்பதை சகித்துக்கொள்ள மாட்டோம்: அமைச்சர் எம்.பி.பாட்டீல்
பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் கனவு நனவாகாது: காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ்