வியாழக்கிழமை 21 மார்ச் 2019

கர்நாடகத்தில் அக்.3-இல் சட்ட மேலவை இடைத் தேர்தல்

DIN | Published: 12th September 2018 08:23 AM

கர்நாடக சட்ட மேலவை இடைத் தேர்தலை அக்.3-ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சட்ட மேலவை உறுப்பினர்களாக (எம்எல்சி) இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, வி.சோமண்ணா (இருவரும் பாஜக), ஜி.பரமேஸ்வர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 
இவர்களில் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஜி.பரமேஸ்வரின் பதவிக்காலம் 2020, ஜூன் 30-ஆம் தேதி வரையும், வி.சோமண்ணாவின் பதவிக் காலம் 2022, ஜூன் 14-ஆம் தேதி வரை உள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மூவரும் தங்கள் எம்.எல்.சி பதவியை ராஜிநாமா செய்தனர்.  இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள 3 சட்ட மேலவை இடங்களுக்கான இடைத் தேர்தலை அக்.3-ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி,  இத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை செப்.14-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.  செப்.22-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது.  வேட்பு மனுக்கள் செப்.24-ஆம் தேதி பரிசீலிக்கப்படுகிறது.
வேட்பு மனுக்களை செப்.26-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம்.  இதைத் தொடர்ந்து, அக்.3-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலை 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இத் தேர்தல் நடைமுறைகள் அக்.6-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

More from the section

5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு; மீட்புப் பணிகள் தீவிரம்


கர்நாடகத்தில் முதல் நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல்


பெங்களூரு வளர்ச்சி கழகத்தில் ஊழல்: பாஜக


அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை


கிரிக்கெட் சூதாட்டத்தில் 3 பேர் கைது