24 பிப்ரவரி 2019

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஆலோசனை

DIN | Published: 12th September 2018 08:24 AM

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க ஆலோசித்து வருவதாக அந்த மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மண்டியாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே, ஆந்திரத்தை போலவே கர்நாடகத்திலும் மாநில அரசே விலையைக் குறைக்க ஆலோசித்து வருகிறது. விரைவில் இதுகுறித்து நிதித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
காங்கிரஸ்-மஜத கூட்டணி கவிழ உள்ளதாக பொய்யான தகவல் வெளியிடும் பாஜகவிலிருந்து 5 எம்எல்ஏக்கள் வெளியேறவைப்போம். தில்லியில் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியிலிருந்து குழுவை அனுப்ப பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார். 
மேலும், நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடியை வழங்க வலியுறுத்தியுள்ளோம். குழு ஆய்வு செய்த பிறகே மாநிலத்துக்கு எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பது தெரியவரும் என்றார்.

More from the section

108 காவல் நிலையங்களில் மக்கள் பங்களிப்பு காவல் திட்டம் அறிமுகம்


நடிகர் தர்ஷனின் 25-ஆவது கன்னட திரைப்படம்: மார்ச் 1-இல் வெளியீடு


பணம் தர மறுத்ததால்  மனைவி மீது அமிலம் வீச்சு

பெங்களூரில் ஓவியக் கண்காட்சி
எடியூரப்பா மீதான வழக்கு விசாரணைக்கு தடை