சனிக்கிழமை 23 மார்ச் 2019

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்: சொத்துவரி மூலம் ரூ.3500 கோடி திரட்ட இலக்கு

DIN | Published: 19th February 2019 09:13 AM

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் 2019-20-ஆம் நிதியாண்டில் சொத்துவரி மூலம் ரூ.3,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் 2019-20-ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டை மாமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்து வரி - நிதிநிலைக் குழுத் தலைவர் எஸ்.பி.ஹேமலதா பேசியது:-
இரண்டரை சதுர கிலோ மீட்டர் கொண்ட 'வெந்த பருப்பு' (பெந்தே காலூரு)  என்றழைக்கப்பட்ட கெம்பே கெளடாவின் பெங்களூரு, இன்றைக்கு 800 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவாக்கம் பெற்றுள்ளது. 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு, குடியிருப்புக்காக வரும் லட்சக்கணக்கான மக்களை பெங்களூரு ஈர்த்துவருகிறது. 
கெம்பேகெளடாவின் பெங்களூரு இதுபோன்ற வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் பன்னாட்டு மாநகரமாக உயர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய், வரி ஈட்டும் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது. 
மத்திய-மாநில அரசுகளுக்கு பெங்களூரு அதிகப்படியான நிதி ஆதாரங்களை வாரி வழஙி வருகிறது. கைமாறாக, பெங்களூரின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த வளர்சிச்க்கும் கூடுதல் நிதியுதவி தேவைப்படுகிறது. 
பெங்களூரின் பொருளாதார பங்களிப்பை கருத்தில் கொண்டு,  அடுத்த 3 ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2019-20-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கர்நாடக முதல்வர் குமாரசாமி ரூ.8,015கோடி ஒதுக்கி தந்துள்ளார். இந்த நிதியில் இருந்து மேம்பாலங்கள், தரைபாலங்கள், பல்லடுக்கு சாலைபாலங்கள், மழைநீர்கால்வாய்கள், ஏரிமேம்பாட்டுப்பணி, திடக்கழிவுமேலாண்மைசேவைகள், மருத்துவமனை கட்டடங்கள் கட்டுவது போன்றப்பணிகள் மேற்கொள்ளப்படும். 
இந்த வரவு-செலவுத் திட்டத்தில் திறன்வாய்ந்த நிர்வாகம்-ஆக்கப்பூர்வமான சேவைகள்,  பெண்கள் மேம்பாடு-சுயதொழில், நிதியியல் பாதுகாப்பு-மகாலட்சுமி திட்டம், சுகாதாரம்-சுற்றுச்சூழல் உருவாக்கம், இருளில் இருந்து வெளிச்சத்திற்கு-ரோஷினி திட்டம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 
நிர்வாகச் சீர்த்திருத்தம்
முகவெட்டு உணரி உயிரிஅளவியல்(பயோமெட்ரிக்)முறையை பயன்படுத்தி வருகைபதிவேட்டுடன் இணைக்கப்பட்டு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படும். பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் விரைவாக கோப்புகளை சரிபார்த்து அனுப்ப மின்-அலுவலக மென்பொருள் பயன்படுத்தப்படும். அஜிம்பிரேம்ஜி அறக்கட்டளையின் வழியாக மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆளுமைப்பயிற்சி அளிக்கப்படும். திறன்வாய்ந்த நிர்வாகத்திற்கு ஒற்றைக்கோப்புமுறை அறிமுகம் செய்யப்படும். அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகவல்தொழில்நுட்பம்சார் பயிற்சி அளிக்கப்படும். தரவுமையம் வலுப்படுத்தப்படும். தகவல்தொழில்நுட்பவசதிகளை மேம்படுத்த ரூ.7.50கோடி ஒதுக்கப்படுகிறது.
நிதி சீர்த்திருத்தம்: வங்கி, நிதிநிறுவனங்களில் வாங்கியுள்ள அடைப்பதன் மூலம் வட்டித்தொகை ரூ.22.50கோடியை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடமானம் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் 11 சொத்துக்களில் 6 மீட்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டில் மேலும் 2 சொத்துக்கள் மீட்கப்படும். மாநகராட்சியின் தேவைக்கேற்ப கர்நாடக நகராட்சி கணக்கியல் மற்றும் வரவு-செலவு திட்டமிடல் விதிகள், 2016 அமல்படுத்தப்படும். நிதி மற்றும் நிர்வாகசீர்த்திருத்ததின்படி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் கணக்கிடல் முறை அமலாக்கப்படும்.
வரிவருவாய்
சொத்துவரி: சொத்துவரி மதிப்பீட்டுக்காக இதுவரை 19 லட்சம் சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிகழ்நிதியாண்டில் ரூ.3,500கோடி சொத்துவரிவசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2007-08-ஆம் ஆண்டு முதல் முத்திரைத்தாள் மீதான மேல்வரி நிலுவைத்தொகை ரூ.500கோடி மாநில அரசிடம் உள்ளது. நிகழாண்டில் இதில் இருந்து ரூ.100கோடி எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள் நீங்கலாக, பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி விதிக்க வகைசெய்ய கர்நாடக நகராட்சிச்சட்டம்,1976, பிரிவு-110-இல் திருத்தம் செய்ய கர்நாடக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் திரட்டலை ஊக்குவிக்க திடீர் சோதனைகள் நடத்த கண்காணிப்புப்பிரிவு தொடங்கப்படும். பத்திரப்பதிவு மற்றும் கோப்புகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். அனைத்துமண்டலங்களிலும் நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள வருவாயை வசூலிக்க சிறப்புமுகாம் நடத்தப்படும்.
மொத்த கட்டட ஆய்வு: வணிகவளாகங்கள், பல்லடுக்கு வணிகமையங்கள், நுட்பப்பூங்காக்கள், பல்லடுக்கு வியாபாரக் கட்டடங்கள், குடியிருப்புப்பகுதிகள் உள்ளிட்ட உயர்வருவாய் சொத்துக்கள் அமைந்துள்ள மொத்த கட்டடங்கள் ஆய்வுப்பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக கூடுதலாக ரூ.400கோடி கிடைக்கும். நிகழாண்டில் 100 உயர்வருவாய் சொத்துக்கள் ஆய்வு
செய்யப்படும்.
விளம்பரவரி: பெங்களூரு மாநகரின் அழகை மேம்படுத்துவதற்காக புதியவிளம்பரக்கொள்கை வகுக்கப்பட்டு, விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. பேருந்துநிறுத்தங்கள், நடைமேடைகள், பொதுகழிவறைகளில் அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் விளம்பரங்கள் செய்வதன் மூலம் ரூ.41.95கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசாரா வருவாய்: புதியமண்டலங்களில் நிலுவையில் இருக்கும் ரூ.400கோடி மேம்பாட்டுக்கட்டணம் வசூலிக்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வரிவிலக்களிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து சேவைவரியாக ரூ.100கோடி வசூலிக்கப்படும். கண்ணாடி இழை தந்திவடம் கட்டணத்தில் ரூ.175கோடி, செல்லிடப்பேசி கோபுரக்கட்டணம் மூலம் ரூ.50கோடி வசூலிக்கப்படும். நகர்ப்புற திட்டமிடல் கட்டணத்தில் ரூ.841.2கோடி வசூலிக்கப்படும்.
அரசு மானியங்கள்: மத்திய அரசின் மானியமாக ரூ.405.76கோடி, மாநில அரசின் மானியமாக ரூ.3,200.35கோடி ஆக மொத்தம் அரசு மானியமாக ரூ.3,606.11கோடி கிடைக்கவிருக்கிறது என்றார் அவர்.

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்
ஒருரூபாயில் வரவு
வரிவருவாய்    33 பைசா
வரிசாரா வருவாய்    29 பைசா
அரசு மானியங்கள்    34 பைசா
சொத்துமீட்பு மற்றும் மீள்நிதி    4 பைசா
ஒருரூபாயில் செலவு
ஊதியம்,ஓய்வூதியம்    8 பைசா
தெருவிளக்கு மின்கட்டணம்    3 பைசா
நிர்வாக செலவினம்    2 பைசா
கடன் மற்றும் வட்டி செலுத்தல்    4 பைசா
திடக்கழிவுமேலாண்மை    11 பைசா
தோட்டக்கலை, ஏரி, வனம்    3 பைசா
சுகாதாரம், கல்வி, இதர செலவு    2 பைசா
சமூகநல திட்டம்    10 பைசா
பராமரிப்புவேலைக்ள்    8பைசா
உள்கட்டமைப்பு, மேம்பாடு, பராமரிப்பு    46 பைசா
வைப்புத்தொகை, மீள்நிதி    3 பைசா

பட்ஜெட் கண்ணோட்டம்
வருவாய்
மொத்தவருவாய்    ரூ.10,691.82கோடி
வரிவருவாய்    ரூ.3,541.95கோடி(33%)
வரிசாராவருவாய்    ரூ.3,083.28கோடி(29%) 
அரசு மானியம்    ரூ.3,606.11 கோடி(34%)
சொத்துமீட்பு மற்றும் மீள்நிதி    ரூ.460.48(4%)
செலவின வகைகள்
ஊதியம்,ஓய்வூதியம்    ரூ.796.85 கோடி(7.46%)
தெருவிளக்கு மின்கட்டணம்    ரூ.257.01கோடி(2.40%)
நிர்வாக செலவினம்    ரூ.247.76கோடி(2.32%)
கடன் மற்றும் வட்டி செலுத்தல்    ரூ.392.79கோடி(3.67%)
திடக்கழிவுமேலாண்மை    ரூ.1,186.80கோடி(11.10%)
தோட்டக்கலை, ஏரி, வனம்-    ரூ.356.34கோடி(3.33%) 
சுகாதாரம், கல்வி, இதர செலவு    ரூ.231.52கோடி(2.17%)
சமூகநல திட்டம்    ரூ.1,071.43கோடி(10.02%)
பராமரிப்புவேலைகள்    ரூ.851.22கோடி(7.96%)
உள்கட்டமைப்பு மேம்பாடு    ரூ.4,945.91கோடி(46.29%)
வைப்புத்தொகை, மீள்நிதி    ரூ.351.00கோடி(3.28%)
 

 

சமூகநலத் திட்டங்களுக்கு ரூ.503.08 கோடி
சமூகநலத் திட்டங்களுக்கு ரூ.503.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்
பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
24.10% மானியதிட்டத்தில் பல்வேறு சமூகநலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. 198 வார்டுகளிலும் எஸ்சி, எஸ்டி மக்கள் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் தலா ரூ.15 லட்சம் செலவில் ரூ.30கோடி செலவில் குடிநீர் தூய்மையாக்கும் கருவி நிறுவப்படும். துப்புரவுத்தொழிலாளர்களுக்கு மதிய உணவுவழங்குவதற்கு ரூ.12கோடி ஒதுக்கப்படுகிறது. 
வார்டுக்கு தலா 10 வீடுகளை எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு கட்டித்தர ரூ.100கோடி ஒதுக்கப்படும். பெங்களூரு மாநகராட்சி இடுகாடுகளில் பணியாற்றும் எஸ்சி/எஸ்டி ஊழியர்களுக்கு ரூ.1கோடி செலவில் தனிவீடுகள் கட்டித்தரப்படும். எஸ்சி/எஸ்டி வகுப்பினர் பொருளாதார தன்னிறைவுப்பெற ரூ.10கோடி
ஒதுக்கப்படும். 
குடிசைமாற்றுவாரியத்தின் வழியாக எஸ்சி/எஸ்டி வகுப்பினர் வீடுகட்டி கொள்வதற்கு ஈட்டுத்தொகை அளிக்க ரூ.12 கோடி ஒதுக்கபடுகிறது. எஸ்சி/எஸ்டி வகுப்பினர் வசிக்கும் இடங்களை மேம்படுத்த ரூ.80கோடி ஒதுக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வார்டுக்கு தலா 5வீடுகள் கட்டிக்கொள்ள நிதியுதவி அளிக்க ரூ.50கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from the section

நிகில், பிரஜ்வல் இருவரும் மக்கள் நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்: முதல்வர் குமாரசாமி
ஏப்.22 முதல் ஏற்றுமதித் தொழில் பயிற்சி
சாலையோர மரங்களைப் பாதுகாக்க வேண்டும்: சாலுமரத திம்மக்கா

மக்களவைத் தேர்தல்: மத்திய பெங்களூரு தொகுதியில்
நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல்

நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவளிக்குமா? எடியூரப்பா விளக்கம்