சனிக்கிழமை 23 மார்ச் 2019

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு: கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்

DIN | Published: 22nd February 2019 09:52 AM

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அடுத்த சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, வாக்காளர் இறுதிப்பட்டியலை கடந்த ஜன.16-ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் w‌w‌w.​c‌e‌o‌k​a‌r‌n​a‌t​a‌k​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல்படி கர்நாடகத்தில் 5.03கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், வாக்காளர் பட்டியலை 7.5 லட்சம்பேர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர். இது போதுமானதல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? அது சரியாக உள்ளதா? பிழை உள்ளதா? என்பதை உறுதிசெய்யவேண்டியது வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடமையாகும். 
எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை ஒவ்வொருவரும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். தேர்தல்சமயத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று வருத்தப்பட்டால் ஒன்றுமே செய்யமுடியாது.
2001-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதிக்குள் பிறந்த, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். வருவாய் அலுவலகங்கள் தவிர w‌w‌w.​c‌e‌o‌k​a‌r‌n​a‌t​a‌k​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n,
w‌w‌w.‌v‌o‌t‌e‌r‌r‌e‌g.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n ஆகிய இணையதளங்களின் வாயிலாகவும் புதிய பெயர்களை சேர்க்க, திருத்த விண்ணப்பிக்கலாம். இவற்றை பரிசீலித்து 7 நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலில்பெயர்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புகைப்படத்துடன்கூடியவாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் புதிதாக பெயர்களை சேர்க்க, திருத்த, நீக்க 17.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டு அக்.11-ஆம் தேதிவரைவுவாக்காளர் அட்டை வெளியிடப்பட்டபிறகு, பிப்.20-ஆம் தேதிவரை 9,31,484 புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு, கடந்த ஜன.25-ஆம் தேதி தேசியவாக்காளர் தினத்தன்று 6,97,184 அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகள் வாக்காளர் சிறப்பு முகாமின்போது அளிக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க, திருத்த, நீக்க பிப்.23,24, மார்ச் 2,3-ஆம் தேதிகளில் சிறப்புவாக்காளர் சேர்ப்புமுகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன. இந்தமுகாமின்போது வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு நடைபெறும். மேலும் வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்புப்பணியும் நடக்கும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பிய இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், பின் தங்கிய சமூகத்தினரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கவனம், செலுத்தப்படும். 
பெங்களூரு, ரேஸ்கோர்ஸ்சாலையில் உள்ள கனிமமாளிகையில் மாநிலவாக்காளர் உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ள 1950, 1800-4255-1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசிகளை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அணுகலாம். பழைய வாக்காளர் அட்டைகளை வைத்திருந்தால் மட்டும் வாக்களிக்க உரிமைப்படைத்தவர்கள் அல்ல. வாக்காளர்பட்டியலில் பெயர் இருக்கவேண்டியது அவசியமாகும் என்றார். 
 

More from the section


கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நீதி விசாரணை தேவை: முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

மக்களவைத் தேர்தல்: இதுவரை 43 பேர் வேட்புமனு தாக்கல்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: மொழிப் பாடத் தேர்வு எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி

இந்திரா உணவகத்தில் உணவின் தரம் குறைந்தால் நடவடிக்கை: துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் எச்சரிக்கை
எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுத சென்ற மாணவர் பலி