திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை

DIN | Published: 12th December 2018 08:42 AM

சென்னையில் கடன் தொல்லை காரணமாக, கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை ஷெனாய்நகர் வெங்கடாசலபதி தெருவைச் சேர்ந்தவர் செ.கிருஷ்ணவேல் (50). மனைவி உமா (40). மகள் கீர்த்தி (17). கிருஷ்ணவேல் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். 
தொழில் தேவைக்காக கிருஷ்ணவேல் வட்டிக்குக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவரால் கடனைத் திருப்பிக் கொடுக்கமுடியவில்லை. இதனால் பணத்தைக் கொடுத்தவர்கள், அதைத் திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணவேல் திங்கள்கிழமை நள்ளிரவு எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை கீர்த்தி தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, தனது தந்தை கிருஷ்ணவேலும், தாய் உமாவும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையின் காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

More from the section

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ வழித்தடத்தில் அதிகாரி ஆய்வு
அஞ்சல்துறையின் பிரத்யேக பார்சல் மையம் சென்னையில் இன்று அறிமுகம்
தெப்பத் திருவிழா
அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்துக்கு கல்விப் பயணம்