புதன்கிழமை 19 டிசம்பர் 2018

மதுபானக் கடைகளை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

By  தாம்பரம்,| DIN | Published: 24th September 2018 02:27 AM

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் நாகல்கேணியில் அரசு மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 பம்மல் நாகல்கேணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள், ஜல்லி உடைக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மிகவும் அதிகரித்து வருவது . இந்நிலையில், பம்மல், திருநீர்மலை பிரதான சாலையில் அடுத்தடுத்து 3 அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டு இரவும் பகலும் எவ்வித தடையும், கட்டுப்பாடும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 இந்நிலையில், நாகல்கேணி சந்திப்பில் 4-ஆவதாக புதிய அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சாலையில் திரண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மதுபான புட்டிகளை சாலையில் கொட்டியும், புட்டிகளை உடைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
 
 

More from the section

மெரீனா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சென்னையில் 515 பேருக்கு டெங்கு; 6,288 பேருக்கு சிகிச்சை: உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
பேருந்துக்குள் தாய் வெட்டிக் கொலை; சகோதரிக்கும் வெட்டு: மகன் கைது
கல்லூரி மாணவர்கள் மோதல்: 7 பேர் கைது
புயல் பாதித்த பகுதிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள்