புதன்கிழமை 19 டிசம்பர் 2018

செப்.26-இல் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

By  சென்னை,| DIN | Published: 24th September 2018 02:28 AM

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மாடித் தோட்டம் அமைத்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் 26-ஆம் தேதி அண்ணா நகரில் நடைபெறவுள்ளது.
 சுய வேலை வாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மாடித் தோட்டம் அமைத்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் புதன்கிழமை (செப்.26) நடைபெறவுள்ளது.
 பயிற்சிக் கட்டணம் ரூ.600: இந்த பயிற்சியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். ஒரு நாள் பயிற்சிக் கட்டணம் ரூ.600. இந்த பயிற்சி வகுப்பு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
 கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணாநகர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத் தலைவர் எச்.கோபால் தெரிவித்தார்.
 

More from the section

மெரீனா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சென்னையில் 515 பேருக்கு டெங்கு; 6,288 பேருக்கு சிகிச்சை: உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
பேருந்துக்குள் தாய் வெட்டிக் கொலை; சகோதரிக்கும் வெட்டு: மகன் கைது
கல்லூரி மாணவர்கள் மோதல்: 7 பேர் கைது
புயல் பாதித்த பகுதிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள்