புதன்கிழமை 20 மார்ச் 2019

கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் குறைந்தன: காவல் ஆணையர்

DIN | Published: 19th February 2019 04:24 AM
சென்னையை அடுத்த சேலையூர் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாடுகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன். உடன், தெற்கு கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,


கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் குறைந்துள்ளன என்று சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பேசினார்.
சென்னையை அடுத்த சேலையூர் சரக காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 770 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:-
கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன. சட்டம் ஒழுங்கு நடவடிக்கை மூலமாக பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. இந்தியாவிலேயே அதிகளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரமாக சென்னை திகழ்கிறது. இதற்குக் காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்புதான். அதற்கு   அவர்களுக்கு நன்றி. மேலும், கேமரா பொருத்த உதவிய அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.
குற்றங்கள் குறைவு: கேமராக்கள் இருப்பதால் செல்போன் பறிப்பு போன்ற சட்ட ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குற்றங்கள் குறைந்துள்ளன. கண்காணிப்பு கேமராக்களால் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுகிறார்கள். டிஜிகாப் ஆப் மூலம் தொலைந்த செல்போன்களை ஐ.எம்.இ.ஐ எண் மூலம் கண்டுபிடிக்கலாம் என்றார் விசுவநாதன். 
நிகழ்ச்சியில் சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால், தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

More from the section

துணை வாக்காளர் பட்டியல் பணி மார்ச் 26-க்குள் முடிவடையும்: மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ்
பெண் பயணிகள்  பாதுகாப்புக்காக குறும்படம் வெளியீடு
மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு
சென்னையிலுள்ள 3  தொகுதிகளுக்கு செலவினப் பார்வையாளர்கள் நியமனம்
மக்களவைத் தேர்தல்: ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்